Website for sale: contact [email protected]

Navigation

இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகப்போகும் படங்களின் லிஸ்ட்! (மார்ச் 27 – ஏப்ரல் 02)

Last updated on: April 2nd, 2023 at 2:30 pm Edited by: InfoTechies

OTT துறையில் இந்த வாரம் வெளியான படங்கள் காணோம்: மர்டர் மிஸ்டரி 2, ஷஹ்ஜாதா, அகிலன், அயோதி, காஸ்லைட், அமிகோஸ் முதலியவை ஓடிடி துறைகளில் ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன. நீங்கள் படத்தை ஆன்லைனில் பார்க்க விரும்பினால், அதின் அமைப்புக் கண்டுபிடிக்க கீழே கொடுக்கப்பட்ட தகவல்களை பாருங்கள்.

S.NoTitleOTT PlatformOTT Release DateLanguage
1ஷேகாடாNetflix1 ஏப்ரல் 2023இந்தி
2மர்டர் மிஸ்டரி 2Netflix31 மார்ச் 2023ஆங்கிலம்
3ஸ்ரீதேவி ஷோபன் பாபுDisney+ Hotstar30 மார்ச் 2023தெலுங்கு
4அகிலன்ZEE530 மார்ச் 2023தமிழ்
5அயோத்திZEE531 மார்ச் 2023தமிழ்
6கில் போக்சூன்Netflix31 மார்ச் 2023கொரியன்
7ஆல்மோஸ்ட் ப்யார் வித் டிஜே மொஹப்பத்Netflix31 மார்ச் 2023இந்தி
8காஸ்லைட்Disney+ Hotstar31 மார்ச் 2023இந்தி
9காபிகேட் கில்லர்Netflix31 மார்ச் 2023சீனம்
10சதி கணி ரெண்டு ஏகராளுAha1 ஏப்ரல் 2023தெலுங்கு
11அமிகோஸ்Netflix1 ஏப்ரல் 2023தெலுங்கு

1.அயோத்தி :

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் எம்.சசிக்குமார். இவர் நடிப்பில் ‘அயோத்தி, நாநா, பரமகுரு, முந்தானை முடிச்சு, பகைவனுக்கு அருள்வாய்’ மற்றும் வெற்றிமாறன் தயாரிக்கும் படம் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘அயோத்தி’ திரைப்படம் கடந்த மார்ச் 3-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் ஆர்.மந்திர மூர்த்தி இயக்கியிருந்தார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் யஷ்பால் ஷர்மா, ப்ரீத்தி அஸ்ரானி, ‘குக் வித் கோமாளி’ புகழ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதனை ‘டிரைடென்ட் ஆர்ட்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்திருந்தார்.

இதற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்திருந்தார், மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தை வருகிற மார்ச் 31-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘ஜீ5’ல் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

2.அகிலன் :

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2, இறைவன், அகிலன், சைரன்’ மற்றும் இயக்குநர் எம்.ராஜேஷ் படம் என 5 படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘அகிலன்’ படம் கடந்த மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கல்யாண கிருஷ்ணன் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பெராடி, ஹரிஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதனன் ராவ், சிராக் ஜானி ஆகியோர் நடித்திருந்தனர்.

இதற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார், விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தை வருகிற மார்ச் 31-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘ஜீ5’ல் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

3.பஹீரா :

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் பிரபு தேவா. இவர் நடித்த மிஸ்ட்ரி த்ரில்லர் ஜானர் படமான ‘பஹீரா’ கடந்த மார்ச் 3-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இதில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி அய்யர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி ஷங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் என ஏழு ஹீரோயின்ஸாம்.

மேலும், முக்கிய ரோல்களில் சாய் குமார், நாசர், பிரகதி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை ‘பரதன் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் ஆர்.வி.பரதன் தயாரித்திருந்தார்.

இதற்கு கணேசன்.எஸ் இசையமைத்திருந்தார், அபிநந்தன் இராமானுஜம் – செல்வகுமார்.எஸ்.கே ஒளிப்பதிவு செய்திருந்தனர், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். இப்படத்தை வருகிற மார்ச் 31-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘சன் நெக்ஸ்ட்’ல் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

4.அரியவன் :

பிரபல இயக்குநர் மித்ரன்.ஆர்.ஜவஹர் இயக்கிய படம் ‘அரியவன்’. இந்த படத்தில் ஹீரோவாக இஷான் என்பவர் நடித்திருந்தார். இப்படம் கடந்த மார்ச் 3-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இதில் மிக முக்கிய ரோல்களில் பிரனாலி, டேனியல் பாலாஜி, சத்யன், ரமா, ரவி வெங்கட்ராமன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு ஜேம்ஸ் வசந்தன், வேத் ஷங்கர், கிரி நந்த் ஆகியோர் இசையமைத்திருந்தனர்.

இதனை ‘MGP மாஸ் மீடியா’ என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தை வருகிற மார்ச் 31-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘டென்ட் கொட்டா’வில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.


 Share this Post: